Title of the document

பஸ் படிக்கட்டில் நின்றபடி பயணிப்பதை தடுக்கும் வகையில், கிருஷ்ணகிரி அரசு பள்ளி மாணவிகள் வைத்த அறிவியல் படைப்பு, மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் இரண்டாமிடம் பிடித்துள்ளது. திருச்சியில்,  அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டி நடந்த மாநில அளவிலான அறிவியல்  கண்காட்சியில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள்  பங்கேற்று தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர். இதில், கிருஷ்ணகிரி அரசு  மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் அறிவியல் படைப்பு, மாநில அளவில்  இரண்டாம் இடம் பிடித்தது. இந்த படைப்பு குறித்து மாணவிகள் கூறியதாவது: 
பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதால் ஆண்டிற்கு 3,200 பேர் இறப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இவற்றை தடுக்கவே இந்த அறிவியல் படைப்பு  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் படிக்கட்டில் ஹைட்ராலிக் எச்சரிக்கை  அலாரம் பொருத்தப்படுகிறது. பஸ் படிக்கட்டில் பயணிகள் நிற்கும் போது, நிலையான  அழுத்தம் ஏற்படுவதால் பஸ்சின் வேகம் 80 சதவீதம் வரை தானாகவே குறையும்.  மேலும், படிக்கட்டில் நிற்காதீர் என எச்சரிக்கை அலாரமும் ஒலிக்கும். இதன்  மூலம் படிக்கட்டில் நிற்பதும், விபத்தும் தவிர்க்கப்படுகிறது. இவ்வாறு மாணவிகள் கூறினர். 
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post