மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு விருது: தமிழக அரசு அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு தமிழக அரசு விருது வழங்க உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு விருதுகள் வருகிற டிசம்பர் 3ம் தேதி மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று வழங்கப்பட உள்ளது. அதன்படி சிறந்த பணியாளர், சிறந்த ஆசிரியர், சிறந்த சமூக பணியாளர், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைபுரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனம், செவித்திறன் குறைந்தோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர், சிறப்பாக பணியாற்றிய ஓட்டுனா் என மொத்தம் 15 விருதுகள் வழங்கப்படும். 

0 Comments:

Post a Comment