தொற்று நோய்கள் சாப்பிடும் போது கைகள் மூலமாக தான் பரவுகிறது என டாக்டர்கள் கூறுகின்றனர். எனவே அப்போது கண்டிப்பாக கைகளை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரத்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் கிராம பகுதிகளில் நடத்தி வருகிறது.காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கை கழுவும் பயிற்சி நடத்தப்பட்டது.. டாக்டர்கள் முருகானந்தம், சசிதீபா, சித்தா டாக்டர் சிராசுதீன் ஆகியோர் இதனை நடத்தினர். சாப்பிடும் முன், கழிப்பறைகளுக்கு சென்று வரும் போதும் எவ்வாறு கைகளை சுத்தம் செய்ய
வேண்டும் என விளக்கப்பட்டது. கை கழுவும் முறை, நன்மைகள் குறித்து விரிவாக கூறப்பட்டது. நுாற்றுக்கணக்கில் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் அமரேசன்,
சூரியகுமார், செவிலி
யர்கள் ராஜலட்சுமி, அய்யம்மாள் செய்தனர்.
Post a Comment