சிறுபான்மையின மாணவர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 31 வரை காலக்கெடு நீட்டிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அக். 31 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1 ஆம் வகுப்பு முதல் பி.எச்.டி வரை கல்வி பயிலும் சிறுபான்மையினரான கிறிஸ்துவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு 2018-19 ஆம் ஆண்டுக்கான பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு (புதியது மற்றும் புதுப்பித்தல்) விண்ணப்பிக்க கடந்த மாதம் 30 ஆம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது, கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அக். 31 ஆம் தேதி வரையிலும் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பள்ளிபடிப்பு கல்வி உதவித்தொகை, பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை, தகுதி, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களின் கீழ் அக். 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.சிறுபான்மையின மாணவ, மாணவிகள் மேற்படி கல்வி உதவித்தொகையை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளமான  இணையதள முகவரியில் உரிய காலத்தில் விண்ணப்பித்து பயனடையலாம்.

0 Comments:

Post a Comment