Title of the document
இயற்பியல், வேதியியல் பாடங்களுக்கான இரண்டாம் தொகுதி புத்தகங்களை, பள்ளி கல்வித்துறை விநியோகம் செய்யாததால், பிளஸ் 1 மாணவர்கள் அவதிப்படுகின்றனர். தமிழகத்தில் காலாண்டு தேர்வு முடிந்த நிலையில் பிளஸ் 1 மாணவர்களுக்கு, இரண்டாம் தொகுதி புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறை வழங்கவில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக ஆங்கில வழியில் படிக்கும் முதல் மற்றும் இரண்டாம் குரூப் மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல் இரண்டாம் தொகுதி புத்தகங்களும், தமிழ் வழியில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு இரண்டாம் தொகுதி வரலாற்று புத்தகங்களும் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால், பிளஸ் 1 மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
அதே நேரத்தில், தமிழ் மொழி வழியில் முதல் குரூப் படிக்கும் மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல் புத்தகங்களும், ஆங்கில மொழி வழியில் மூன்றாம் குரூப் படிக்கும் மாணவர்களுக்கு வரலாறு புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மேல்நிலை வகுப்பு ஆசிரியர்கள் கூறுகையில், ‘‘காலாண்டு தேர்வு முடிந்து ஒரு மாதமான நிலையில், ஆங்கில மொழி வழியில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல் இரண்டாம் தொகுதி புத்தகங்களும், தமிழ் மொழி வழியில் படிக்கும் மாணவர்களுக்கு, இரண்டாம் தொகுதி வரலாற்று புத்தகங்கள் வழங்கப்படவில்லை. பாடங்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து, அதனை நகல் எடுத்து மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம். பள்ளிக்கல்வித்துறையில் கேட்டால் புத்தகங்களை அச்சடிக்கிறோம். விரைவில் விநியோகம் செய்யப்படும் என்கின்றனர். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, விரைவில் புத்தகங்களை விநியோகம் செய்ய பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post