மேலும் சூரசம்ஹாரத்தினைக்கான மாவட்ட மக்கள் அனைவரும் நவம்பர் 13 ம் தேதியன்று வருகை தந்த வண்ணம் இருப்பார்கள். இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் நவம்பர் 13 ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப்தந்தூரி அவர்கள் உத்தரவிட்டார்.
இந்த உள்ளூர் விடுமுறையானது அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்கும்., அங்கு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் பொருந்தாது என்று அறிவித்துள்ளார். மேலும் அவசர தேவைகளுக்கான பொது அலுவலகங்கள் குறைந்த பணியாளர்கள் மட்டும் பணியாற்றுவார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் இந்த விடுமுறை தினமானது அரசாங்கத்தின் பொது விடுமுறை இல்லை என்பதால்., இதற்க்காக டிசம்பர் 8 ம் தேதியான இரண்டாம் சனிக்கிழமையில் அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று அறிவித்துள்ளார்.

إرسال تعليق