தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட இருப்பதால் அரசு அலுவலகங்களில் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஊதிய உடன்பாடுகளை களைவது, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தை ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் நடத்துகின்றனர். 10 லட்சம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பெடுப்பார்கள் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை ஒடுக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இன்று தற்செயல் விடுப்பு எடுத்தால் அதற்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று அரசு கூறியுள்ளது. ஆனால் அச்சுறுத்தல்களை பற்றி கவலைப்படாமல் விடுப்பு எடுத்து அரசுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என்று அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment