Title of the document



நீட்' வகுப்புக்கு சுழற்சி முறையில், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், வகுப்பு எடுப்பதில் உள்ள சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகம் முழுக்க, இன்று, நீட் பயிற்சி வகுப்பு துவங்குகிறது


வார இறுதி நாட்களில் நடக்கும், இவ்வகுப்புக்கு பயிற்சி அளிக்க, ஒரு பாடத்துக்கு, 30 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டனர்; இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.இதனால், பள்ளிகளில் வகுப்பு கையாள்வதில், சிக்கல் இருப்பதாக புகார் எழுந்தது. முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில், நீட் வகுப்பு பயிற்சி முறையில், மாற்றம் செய்ய வேண்டுமென, கோரிக்கை விடுக்கப்பட்டது


இதன் அடிப்படையில், நேற்று ராஜவீதி, துணிவணிகர் மேல்நிலைப்பள்ளி, மைக்கேல் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட நான்கு இடங்களில், ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.தாவரவியல், விலங்கியல், கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட, பாடங்கள் கையாளும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்றனர்


மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் கல்வி அதிகாரிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், பாடவாரியாக ஆய்வு நடந்தது


சந்தேகங்களுக்கு மட்டும் விளக்கம்


கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,'நீட் வகுப்பு கையாள, பழைய முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது


 இதன்படி, வகுப்பு எடுக்கும் போது, பணிச்சுமை இருக்காது. குறிப்பாக ஒரு மையத்துக்கு, ஒரு பாடத்துக்கு எட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். செயற்கைக்கோள் மூலம், சென்னையில் இருந்து, பாட வல்லுனர்கள் வகுப்பு நடத்துவர்


வீடியோ கான்பிரன்ஸ் முறையில் நடக்கும் வகுப்பில், ஏற்படும் சந்தேகங்களை மட்டும், ஆசிரியர்கள் நிவர்த்தி செய்வர்' என்றனர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post