Title of the document






சொத்து வரி சீராய்வு தொடர்பாக தமிழக  அரசால் 19.07.2018 மற்றும் 26.07.2018 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. சென்னையில் குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதம் மிகாமலும், குடியிருப்பல்லாத கட்டடங்களுக்கு 100 சதவீதம் மிகாமலும், சொத்து வரி சீராய்வு மேற்கொள்ளப்படும் என்று அதில் அறிவிக்கப்பட்டது. சொத்து வரி சீராய்வினை 2018-19-ஆம் நிதியாண்டின் முதலாம் அரையாண்டு முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், பெருநகர சென்னை மாநகராட்சி, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சொத்து சுய மதிப்பீட்டு விவர அறிக்கை மனுக்களை வீடு வீடாக சென்னை மாநாகராட்சி அதிகாரிகள் கொடுத்தனர். அதேநேரத்தில், ஆன்லைன் மூலமும் சொத்து சுய மதிப்பீட்டு விவர அறிக்கையை (self assessment) தாக்கல் செய்யலாம் என்று அறிவித்து இருந்தனர். அதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிந்தது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள்  கூறுகையில், ''சென்னையில் 12 லட்சம் பேர் சொத்து வரி செலுத்தி வருகின்றனர். இதில், 8 லட்சம் பேர், சொத்து சுயமதிப்பீடு விவர படிவத்தை மாநகராட்சி கவுன்டர்களில்  தாக்கல் செய்துள்ளனர்.  ஒன்றரை லட்சம் பேர் ஆன்லைனில் தாக்கல் செய்துள்ளனர். ஆன்லைனில் தாக்கல் செய்வது எளிதுதான் என்றாலும் அது முழுமுழுக்க ஆங்கிலத்தில் உள்ளதால் தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள் அதை பூர்த்தி செய்ய சிரமப்பட்டதே ஆன்லைன் விண்ணப்பம் குறைந்ததற்கு முக்கிய காரணம் என்று தெரிகிறது. கவுன்டர்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் உடனுக்குடன் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. முதல் அரையாண்டு வரியினை முன்னதாக செலுத்தி இருந்தாலும் உயர்த்தப்பட்ட சொத்து வரியின் வித்தியாச தொகையினை உரிமையாளர்கள் செலுத்த வேண்டும்'' என்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post