மீனவ பட்டதாரிகளுக்கு போட்டி தேர்வுக்கு பயிற்சி

மீனவ சமுதாயத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள், இந்தியக் குடிமைப்பணியில் சேர்வதற்கான போட்டித் தேர்வில் சிறந்து விளங்க, ஆயத்த பயிற்சி வகுப்புகள் நடக்கவுள்ளன' என கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பயிற்சி பெற விரும்புவோர், விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை, மீன்வளத்துறையின், www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், மண்டல மீன்வளத்துறை இணை, துணை இயக்குனர்கள் மற்றும் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில், வேலை நாட்களில் நேரில் சென்று இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில், வரும் அக்., 5 மாலை 5:00 மணிக்குள், பதிவு அஞ்சல் மூலமாகவோ, அல்லது நேரடியாகவோ சென்று விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட மீன்வளத்துறை உதவி, துணை, இணை இயக்குனர்கள் அலுவலங்களை, நேரில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment