ஆங்கில திறனை வளர்ப்பது அவசியம் :மாணவர்களுக்கு பேராசிரியர் அறிவுரை


தகவல் பரிமாற்றத்திற்கு ஆங்கில மொழித்திறன் அவசியம்,''என, தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் திருச்சி என்.ஐ.டி., பேராசிரியர் நாராயணசாமி பேசினார்.இக்கல்லுாரி பட்டமளிப்பு விழா கம்மவார் சங்க பொதுச் செயலாளர் பொன்னுச்சாமி தலைமையில் நடந்தது. முதல்வர் நாகரத்தினம் வரவேற்றார். சங்க தலைவர் நம்பெருமாள், கல்லுாரிச் செயலாளர் சந்திரசேகரன், துணைத் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருச்சி என்.ஐ.டி., கல்லுாரியின் தொழில்நுட்ப உற்பத்தித்துறையின் பேராசிரியர் நாராயணசாமி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் மட்டுமே அடுத்தடுத்த தொழில்நுட்பங்கள், முன்னேற்றங்கள் உடனுக்குடன் வந்து கொண்டே இருக்கின்றன.

0 Comments:

Post a Comment