காம்பவுண்ட் இல்லாத அரசு பள்ளிகளை பாதுகாக்கலாமே :இரவில் சமூக விரோதிகள் கும்மாளம்


விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் காம்பவுண்ட் இல்லாததால் இரவு நேரத்தில் சமூகவிரோதிகளின் கூடாராமாக மாறி வருகிறது.தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளில் பல தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி பல லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டடங்களை கட்டி தந்துள்ளது.கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மாவட்டத்தில் 50க்கு மேற்பட்ட இடங்களில் புதியதாக பள்ளிக்கட்டடங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடங்களில் சுற்றிலும் போதுமான உயரத்தில் காம்பவுண்ட் கட்டப்படவில்லை. இதனால் அப்பகுதியில் நடைபெறும் விழாக்கள், துக்க நிகழ்ச்சியின் போதும் பள்ளி வளாகம் திறந்த வெளி பாராக பயன்படகிறது.போதையில் குடிநீர் குழாய்கள், மின்சார ஒயர், கண்ணாடி ஜன்னல்,கழிப்பறையின் கதவுகளை சேதப்படுத்தி விடுகின்றனர். காலி மது பாட்டில்களையும், பிளாஸ்டிக் டம்ளர்களை கண்டபடி வீசி செல்கின்றனர்.மறு நாள் பள்ளிக்கு வரும் மாணவர்கள் இச்செயல்களால் கண்டு பதறுகின்றனர் மாணவர்கள் உட்காரும் பெஞ்ச், டெஸ்க் போன்றவைகளை கூட சேதப்படுத்துகின்றனர். காம்பவுண்ட் இல்லாத பள்ளிகளுக்கு காம்பவுன்ட் கட்டித்தருவதுடன் இரவு நேர காவாலாளிகளை நியமிக்க வேண்டும்.'பார்'ஆகும் அவலம்காம்பவுண்ட் இல்லாத அரசு பள்ளிகளின் வளாகங்கள் இரவு நேரத்தில் சமூகவிரோதிகளால் திறந்த வெளி பாராக பயன்படுகிறது. தேர்வுகால விடுமுறை நாட்களின் போது பகல் நேரத்திலும் மது பிரியர்கள் ஆக்கிரமித்து கொள்கின்றனர். பள்ளி பொருட்கள் சேதமடைவதுடன் திருடு போகும் சம்பவங்களும் நடக்கின்றன. இதை தடுக்க அனைத்து அரசு பள்ளிகளிலும் காம்பவுண்ட் கட்டுவதுடன் கவலாளியை நியமனம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- மாரியப்பன், சமூகநலஆர்வலர், சாத்துார்.

3 comments:

  1. நூற்றுக்கு நூறு உண்மை.இரவுநேரக் காவலாளி அரசு பள்ளிகளுக்குக் கட்டாயம் தேவை.இன்னும் பள்ளிகளில் கழிப்பறைகள் தூய்மை காக்கப்பட வேண்டும்.

    ReplyDelete
  2. புனிதமாகப் போற்றப்பட வேண்டிய அரசு பள்ளிக்கூடங்கள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுவது கொடிதினும் கொடிதல்லவா?அரசு பள்சுளிகளின் சுற்றுச்சுவர் தாண்டிக்குதித்து நுழையும் நுழைவாயிலாக இல்லாமல் உயரமாக்கப்பட வேண்டும்.

    ReplyDelete
  3. புனிதமாகப் போற்றப்பட வேண்டிய அரசு பள்ளிக்கூடங்கள் சமூக கூடாரமாக மாறுவது கொடிதினும் கொடிதல்லவா?அரசு பள்ளிகளின் சுற்றுச்சுவர் தாண்டிக்குதித்து நுழையும் நுழைவாயிலாக இல்லாமல் உயரமாக்கப்பட வேண்டும்.

    ReplyDelete