Title of the document

உலகம் முழுவதும் 1 பில்லியன் பயனர்கள் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். நாள் ஒன்றிற்கு 65 பில்லியன் குறுஞ்செய்திகள் உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலி மூலம் அனுப்பப்படுகிறது. நாள் ஒன்றிற்கு 5 பில்லியன் புகைப்படங்கள் மற்றும் 1 பில்லியன் வீடியோ பதிவுகள் வாட்ஸ் ஆப் மூலம் பயனர்களுக்கிடையே பகிரப்படுகிறது.

இத்துடன் ஒவ்வொரு நாளும் வாட்ஸ் ஆப் இல், 2 பில்லியன் நிமிடங்களுக்கு மேல் குரல் மற்றும் வீடியோ அழைப்புகள் செய்யப்படுகின்றன என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய வாட்ஸ் ஆப் அப்டேட்
அண்மையில் வெளியான புதிய வாட்ஸ் ஆப் அப்டேட் இல் பயனர்கள் தவறுதலாக அனுப்பிய மெசேஜை டெலீட் செய்யும் வசதியை வாட்ஸ் ஆப் நிறுவனம் ரிம்முகம் செய்தது. இது பலருக்கும் உதவியாய் இருக்கிறது, ஆனாலும் இன்னும் சிலருக்கு என்ன மெசேஜ் அனுப்பி டெலீட் செய்தார்கள், அது என்னவாக இருக்குமென்ற குழப்பம் அதிக வந்து பொய் இருக்கும்.

நோட்டிசேவ்(Notisave)

டெலீட் செய்யப்பட்ட அந்த மெசேஜ்களை எப்படிப் படிப்பது என்ற சுலபமான முறையை நாங்கள் உங்களுக்குக் காது தருகிறோம்.
இதற்கு முதலில் நீங்கள் செய்ய வேண்டியது உங்களின் ஸ்மார்ட்போன் இல் உள்ள கூகுள் பிளே ஸ்டோர் சென்று நோட்டிசேவ்(Notisave) என்கிற செயலியை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். இந்தச் செயலி வெறும் 4.4mb மட்டுமே.


செயல்முறை
- முதலில் நோட்டிசேவ் செயலியை உங்கள் மொபைல் இல் டவுன்லோட் செய்து ஓபன் செய்து கொள்ளுங்கள்.
- நோட்டிசேவ் செயலிக்கு தேவையான அனுமதிகளை வழங்குங்கள்.
- நோட்டிசேவ் செயலி நோட்டிபிகேஷன் ஆப்ஷன் உள் செல்லுங்கள்.
- இப்பொழுது நோட்டிபிகேஷன் இல் வாட்ஸ் ஆப் கிளிக் செய்யுங்கள்.
- நோட்டிசேவ் இப்பொழுது உங்களின் வாட்ஸ் ஆப் உடன் இணைத்திருக்கும்.

டெலீட் ஃபார் எவ்ரிஒன்
உங்களுக்கு மெசேஜ் அனுப்பும் நபர் இனிமேல் உங்களுக்கு ஒரு முறை மெசஜ் அனுப்பிவிட்டு அதை டெலீட் ஃபார் எவ்ரிஒன் கொடுத்தால், உங்கள் வாட்ஸ் ஆப் இல் உள்ள மெசேஜ்கள் டெலீட் செய்யப்பட்டு காணாமல் போய்விடும். ஆனால் நோட்டிசேவ் உங்களிடம் இருப்பதினால் இனி அந்தக் கவலை வேண்டாம்.

மெசேஜ்களின் நகல்
உங்கள் வாட்ஸ் ஆப் இல் டெலீட் செய்யப்பட்ட மெசேஜ்களின் நகல்கள் நோட்டிசேவ் இல் டெலீட் ஆகாமல் அப்படியே இருக்கும். டெலீட் செய்யப்பட்ட மெசேஜ் நோட்டிசேவ் ஆப் திறந்தாள் வரிசையாக நாள், தேதி, நேரம் உட்பட அனைத்து விபரங்களுடன் உங்களுக்குக் கிடைக்கும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post