பள்ளிக்கு சீல் வைத்த பொதுப்பணித்துறையினர்; கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவர்கள்!


தூத்துக்குடி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய
துவக்கப்பள்ளி கட்டடம் பழுதடைந்துள்ளதால், சரியான கட்டடம் இல்லாமல் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கடந்த 1967ஆம் ஆண்டு கட்டப்பட்டதால் பள்ளியின் பெரும் பகுதி சேதமடைந்ததையடுத்து இந்த பள்ளியின் அருகே சர்வ சிக்சா அபியான் திட்டத்தின் மூலம் ரூ.3 லட்சம் செலவில் கடந்த 2004-ம் ஆண்டு புதிய கட்டடம் கட்டப்பட்டு பள்ளி செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த கட்டடமும் பழுதடைந்துள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த கட்டிடத்திற்கு அண்மையில் சீல் வைத்து மூடினர். இதனால் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுள்ளதாகவும், தரமான பள்ளி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments:

Post a Comment