Title of the document


அடையாறு பாம்பு பண்ணையை பார்வையிட்ட, பள்ளி, மாணவ - மாணவியர், அங்கிருந்த, அமெரிக்க பச்சை ஓணானை பார்த்து அதிசயித்தனர்.'தினமலர்' மாணவர்பதிப்பு மற்றும் கிண்டி, பாம்பு பண்ணை இணைந்து, பள்ளி மாணவ- - மாணவியருக்கு, பாம்புகள் குறித்த புரிதலை ஏற்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை, நேற்று நடத்தின.அடையாறு, பாம்பு பண்ணையில் நடந்த நிகழ்ச்சியில், பழைய பல்லாவரம், வேல்ஸ்வித்யாஸ்ரம் பள்ளி, மாணவ -- மாணவியர், 450 பேர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சியில், இந்தி யாவில் உள்ள பாம்பு வகை; விஷமுள்ள பாம்பு களை, எப்படி அடையாளம் காண்பது; பாம்பு கடித்தால் காணப்படும் அறிகுறி, முதலுதவி ஆகியவை குறித்து, சுற்றுச்சூழல் கல்வி அலுவலர் விளக்கினார்.பின், பண்ணையில் உள்ள பாம்புகள், பதப்படுத்தப்பட்ட அரியவகை உயிரினங்கள், முதலைகள், அமெரிக்க பச்சை ஓணான் ஆகியவற்றை கண்டு, மாணவ - மாணவியர் அதிசயித்தனர்.மாணவ - மாணவியரிடம், பாம்பு பண்ணையின் சுற்றுச்சூழல் கல்வி அலுவலர் கண்ணன் கூறியதாவது:நம் சுற்றுச்சூழல் எப்படி உள்ளது என்பதை காட்டுவது, தவளைகள். அவை அதிகம் காணப்பட்டால், அந்த இடம் துாய்மையாக உள்ளது என, அர்த்தம்.தவளை வசிக்காத இடத்தில், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது என, புரிந்துக் கொள்ள வேண்டும். சில வகை தவளைகள், 30 அடி உயரம் வரை தாவும் பலம் கொண்டது.இவ்வாறு அவர் கூறினார்.பயம் நீங்கியதுஇந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியால், மாணவ - மாணவியருக்கு, பாம்புகள் குறித்த பயம் நீங்கியுள்ளது. இதுபோன்ற பயனுள்ள நிகழ்ச்சியை, 'தினமலர்' நாளிதழ் தொடர்ந்து நடத்த வேண்டும்.பி.சுப்ரியாஆசிரியை, வேல்ஸ் வித்யாஸ்ரம் பள்ளி.வரவேற்கிறோம்!இந்தியாவில், 250க்கும் மேற்பட்ட பாம்புகள் உள்ளன என்பதை, அறிந்து கொண்டோம். பாம்புகள் குறித்த அனைத்து விஷயங்களையும், பண்ணையின் சுற்றுச்சூழல் கல்வி அலுவலர், தெளிவாக விளக்கினார். இந்நிகழ்ச்சி, வரவேற்கத்தக்கது.என்.மல்லிகா, ஆசிரியை, வேல்ஸ் வித்யாஸ்ரம் பள்ளி.ஆச்சிரியமாக இருந்தது!முதல் முறையாக, பாம்புகளை நேரில் பார்த்தது, மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில், பாம்புகள் குறித்து, நிறைய தெரிந்து கொண்டேன். இப்பண்ணையில் உள்ள முதலைகள், ஓணான் ஆகியவற்றை, நேரில் பார்த்தது, ஆச்சரியமாக இருந்தது.யு.ஜி.சஞ்ஜித்,ஆறாம் வகுப்பு, வேல்ஸ் வித்யாஸ்ரம் பள்ளி.தெரிந்து கொண்டேன்பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள அரிய வகை உயிரினங்களை பார்க்கவே, பிரமிப்பாக உள்ளது. பாம்புகளை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்துக் கொண்டேன். இந்நிகழ்ச்சி, 'சூப்பராக' இருந்தது.ஜெ.வர்ஷினி, 6ம் வகுப்பு மாணவி,வேல்ஸ் வித்யாஸ்ரம் பள்ளி

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post