Title of the document

மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நவ., 5 முதல், தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக, மாநில பொதுக்குழு கூட்டம், சேலத்தில், நேற்று நடந்தது. மாநில தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார்
அதில், ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை சீர் குலைக்கும் சி.பி.எஸ்., திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல்; ஐந்தாவது ஊதியக்குழு முதல், பாதிக்கப்பட்டு வரும் முதுநிலை ஆசிரியர்களின், ஊதிய முரண்பாட்டை களைய அமைக்கப்பட்ட, ஒருநபர் குழு அறிக்கையை, உடனடியாக வெளியிடுதல்; 2004 - 06ல், தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட முதுநிலை ஆசிரியர்களை, நியமன நாள் முதல், பணி வரன்முறை செய்து, அரசாணை வெளியிட வேண்டும்
விடுமுறை நாட்களில், 'நீட்' பயிற்சி வகுப்பு நடத்துவதை அரசு கைவிடுவதோடு, அரசாணை, 101ஐ, திரும்ப பெறுதல்; ஒன்பது, 10ம் வகுப்புகளுக்கு முதுகலை ஆசிரியர்களை நேரடி நியமனம் செய்வதோடு, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை, முதுகலை ஆசிரியர்களுக்கு வழங்குதல்; ஊதிய முரண்பாடுகளை களைந்து, 21 மாத ஊதிய நிலுவை வழங்கி, புது ஓய்வூதியத்தை ரத்து செய்யாவிட்டால், நவ., 5ல் இருந்து, தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுதல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post