Title of the document

ஐ.நாவின் குழந்தைகள் நிதியம், உலக சுகாதார நிறுவனம், ஐ.நா மக்கள் தொகை பிரிவு மற்றும் உலக வங்கி இணைந்து சமீபத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வின் அறிக்கை இப்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை குறித்து பேசிய ஆய்வுக்குழுவின் தலைவர் லாரன்ஸ் சாண்டி, ஒவ்வொரு ஆண்டும் 15 வயதுக்கு உட்பட்ட 6.3 மில்லியன் குழந்தைகள், சரிசெய்யக்கூடிய சாதாரண காரணங்களினால் உயிரிழப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

1990-ஆண்டுக்கு பிறகு குழந்தைகள் இறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும், இருப்பினும் இன்றும் குழந்தைகளின் உயிரிழப்பு தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இன அடிப்படையில் குழந்தைகள் இறப்பு அமைவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

ஆப்ரிக்காவில் உள்ள குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுவதாகவும், ஆசிய கண்டத்தில் இறக்கும் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் வீதம் ஆப்ரிக்காவில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், 2018-ல் இருந்து 2030-க்குள் 5 வயதுக்கும் குறைவான 56 மில்லியன் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் எனவும் அந்த ஆய்வுக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. மிகச்சாதாரண வழிமுறைகளான நல்ல உணவு, குடிநீர் மருத்துவம் போன்றவற்றால் இறப்பு விகிதத்தை கணிசமாக குறைக்க முடியும் எனவும் அறிக்கை தெரிவிக்கிறது .
குணப்படுத்தக்கூடிய மலேரியா போன்ற நோய்களாலேயே 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிகம் அதிகம் உயிரிழப்பதாகவும் ஐ.நா குழு வேதனை தெரிவித்துள்ளது. 5 வயதுக்கு மேற்பட்ட 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் விபத்துக்களினாலும், நீரில் மூழ்குவதாலும் இறப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அதிக அளவிலான நாடுகளில் கிராமப்புற பகுதிகளிலேயே குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாகவும், படிப்பறிவு அற்ற பெற்றோர்களினால் தங்கள் குழந்தைகளை முறையாக பேண முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை தொடர்பாக பேசிய உலக வங்கியின் சுகாதாரம் மற்றும் மக்கள் தொகை இயக்குனர் டிம் எவான்ஸ், குணப்படுத்த முடியும் காரணங்களால் ஏற்படும் மரணங்களை தடுப்பதிலும், குழந்தைகள் நலத்தில் முதலீடு செய்வதிலுமே நாட்டின் வளர்ச்சிக்கு அஸ்திவாரம் போட முடியும் என குறிப்பிட்டுள்ளார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post