மாணவர்களுக்கான 2ம் பருவ பாட புத்தகங்கள் தயார்


முதல் 9ம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு,  வினியோகிப்பப்படும் 2ம்பருவ பாட புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் முதல்  பருவத்துக்கான(காலாண்டு) தேர்வானது தற்போது நடந்து வருகிறது. இதையடுத்து,  அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில்,  ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை  படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இரண்டாம் பருவத்துக்கான பாட புத்தகங்கள்  மற்றும் நோட் உள்ளிட்டவை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்வி மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, சுயநிதி பள்ளி,  நகராட்சி பள்ளிகளில் 1 முதல் 9ம்வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் சுமார் 57ஆயிரத்து 800 பேருக்கு வழங்குவதற்கான இரண்டாம் பருவத்துக்கு தேவையான அனைத்து பாட புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகளும், தற்போது கோட்டூர் ரோட்டில் உள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு கொண்டு  வரப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக  அறிவியல் என பாடம் வாரியாக தனித்தனியாக பிரித்தெடுத்து, அதனை சரிபார்த்து  வைக்கும் பணியில் கல்வி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் ஊராட்சி ஒன்றிய  பள்ளிகளுக்கு தேவையான புத்தகங்கள், அந்தந்த வட்டார கல்வி அலுவலகத்துக்கு  அனுப்பி வைக்கப்படுகிறது. தயார் நிலையில் உள்ள இந்த பாட புத்தகங்கள்  அனைத்தும், 22ம் தேதியுடன் முதல் பருவ தேர்வு நிறைவு பெற்றவுடன், அந்தந்த  பள்ளிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற உள்ளது. அதன்பின், விடுமுறை முடிந்து  அக்டோபர் 3ம் தேதி பள்ளி திறக்கும்போது, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும்  பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கு இரண்டாம் பருவ பாட  புத்தகங்கள் வழங்க பட உள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்

0 Comments:

Post a Comment