மத்திய அரசில் 1,136 பணியிடம் வரும் 30க்குள் விண்ணப்பிக்கலாம்


'மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, 1,136 பணியிடங்களுக்கான தேர்வுக்கு, வரும், 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, பணியாளர் தேர்வாணையம் அழைப்பு விடுத்து உள்ளது.

இது குறித்து, பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் பல்வேறு துறைகளில், 1,136 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், தெற்கு மண்டலத்தில் மட்டும், 13 பிரிவுகளில், 55 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில், எட்டு பிரிவுகளில், பட்டதாரிகள் நிலையிலும், ஐந்து பிரிவுகளில், பிளஸ் 2 நிலையிலும், ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தேர்வு குறித்த விவரங்கள், நிபந்தனைகள், விண்ணப்பப் படிவம் போன்றவற்றை, www.ssc.nic.in என்ற இணையதளத்திலும், தெற்கு மண்டல அலுவலகத்தின், www.sscsr.gov.in என்ற, இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம். தகுதி உடையோர், www.ssconline.nic.in என்ற, தேர்வாணைய இணையதளத்தில், 'ஆன்லைன்' வழியே, 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகள், அக்., 27, 29 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment