Title of the document


கல்வித் துறையில் வாராக் கடன்கள் அதிகரித்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மூன்று நிதியாண்டுகளாக கல்வித் துறையில் வாராக் கடன்கள் ஏற்றப் பாதையில் பயணித்து வருகிறது. 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் கல்வித் துறையிலுள்ள செயல்படா சொத்துகளின் மதிப்பு 9 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்திய வங்கிகள் சங்கம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல்படி, கல்வித் துறையில் வாராக் கடன்கள் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 7.3 விழுக்காடும், பின்னர் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 7.67 விழுக்காடும், 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 8.67 விழுக்காடும் அதிகரித்துள்ளது.

2017-18ஆம் ஆண்டில் கல்விக் கடன்களின் மொத்த மதிப்பு ரூ.71,724.65 கோடியாக இருந்துள்ளது. இதில் ரூ.6,434.62 கோடி வாராக் கடன்களாக இருந்துள்ளது. கடந்த நிதியாண்டில் 7.86 லட்சம் மாணவர்களுக்கு ரூ.13,470 கோடி மதிப்பிலான கல்விக் கடன்களை பொதுத் துறை வங்கிகள் வழங்கியுள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 1.5 லட்சம் மாணவர்கள் கல்விக் கடன் பெற்றுள்ளனர். மேலும், கேரளாவைச் சேர்ந்த 99,314 மாணவர்களும், கர்நாடகாவைச் சேர்ந்த 90,630 மாணவர்களும் கல்விக் கடன் பெற்றுள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post