மருத்துவம் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவது அபத்தமானது- உயர் நீதிமன்றம் உத்தரவு!


மருத்துவ படிப்புக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவது அபத்தமானது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தில் மருத்துவம் படிக்கும் 19 மாணவர் கள் தங்களுக்கு கருணை மதிப் பெண்கள்வழங்கி மருத்துவ படிப்பை நிறைவு செய்ய அனு மதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப் பித்த உத்தரவில், ‘‘கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டு மென்பதை மாணவர்கள் உரிமை யாக கோர முடியாது. கருணை மதிப்பெண்கள் வழங்குவது குறித்து பல்கலைக்கழகம்தான் முடிவு செய்ய வேண்டும்.மேலும், மனித உயிர்களை காப்பாற்றும் மருத்துவம் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கருணை மதிப் பெண்கள் வழங்குவது என்பது அபத்தமானது.எனவே கருணை மதிப் பெண்கள் வழங்கு வதை ரத்து செய் வது தொடர்பாக விதிகளில் திருத் தம் கொண்டு வர வேண்டும். ஏனெ னில் கருணை மதிப்பெண் பெற்று மருத்து வரானவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாது.அதுபோன்ற நபர்களிடம் தங்க ளது உயிரை பணயம்வைக்க யாரும் விரும்ப மாட்டார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி கருணை மதிப்பெண்கள் வழங்க உத்தரவிடுவதையும் தவிர்க்க வேண்டும்” எனக்கூறி வழக்கை முடித்து வைத்தார்.