எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய முடியாது' - மத்திய அரசு

புதுடில்லி:'அரசுத்துறை பதவி உயர்வுகளின் போது, பொருளாதார ரீதியில் முன்னேறியோர் என்ற அடிப்படையில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய முடியாது' என, மத்திய அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலித் எனப்படும், எஸ்.சி., மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த, எஸ்.டி., பிரிவு மக்களுக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.உச்ச நீதிமன்றம்அரசுத்துறை பதவி உயர்வில், இட ஒதுக்கீட்டு முறையை கடைபிடிக்கும் முன், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவைச் சேர்ந்தோர், பொருளாதார ரீதியில் தன்னிறைவடைந்து, வளமானவர்களாக இருந்தால், அவர்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கேள்வி எழுப்பியது.கிரீமிலேயர் எனப்படும், பொருளாதார ரீதியில் முன்னேறிய, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, இட ஒதுக்கீடு வழங்குவதை நிறுத்தி வைப்பது குறித்து, மத்திய அரசிடம், உச்ச நீதிமன்றம் கருத்து கேட்டுள்ளது.இது குறித்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.நேற்றைய விசாரணையின் போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான, அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால், நீதிபதிகளிடம் கூறியதாவது:பொருளாதார ரீதியில் முன்னேறியிருந்தாலும், தலித், பழங்குடியினத்தைச் சேர்ந்த மக்களுக்கு, சமுதாயத்தில் இன்னும் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.அனுமதி இல்லைவருமானம், தொழில், வேலைவாய்ப்பு போன்றவற்றில் தன்னிறைவடைந்த, எஸ்.சி., அல்லது எஸ்.டி.,யால், வேறு ஜாதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்ய முடிவதில்லை. அதற்கு, இந்த சமூகம் அனுமதி அளிப்பதில்லை.அந்த பிரிவினர் பல விஷயங்களில் இன்னும் பின்தங்கியே உள்ளனர். எனவே, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில், கிரீமி லேயர் என்ற முறையை கருத்தில் கொள்ள முடியாது.எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினரில் ஒரு குறிப்பிட்ட சாராரை, அந்த சலுகை பெறும் பட்டியலில் இருந்து நீக்க, ஜனாதிபதி மற்றும் பார்லிமென்ட் ஒப்புதல் தேவை.எனவே, கிரீமி லேயர் எனக் கூறி, அரசுத்துறை பதவி உயர்வில், எஸ்.சி., - எஸ்.டி.,க்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை மறுக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.