
மேல் நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் படியில் பயணம் செய்யவே விரும்புவார்கள்..எவ்வளவு தான் ஓட்டுநரும் நடத்துநரும் கூறினாலும் அவர்கள் உள்ளே வரமாட்டார்கள்..படியில் பயணம் நொடியில் மரணம் என்பது தெரிந்திருந்தாலும் படியில் பயணம் செய்யவே விரும்புவார்கள்..ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வயலோகம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஜெயராஜ் அவர்கள் தன்னுடைய பள்ளி மாணவர்கள் பாதுகாப்பான ஒழுக்கத்துடன் கூடிய பயணம் பேருந்தில் மேற்கொள்ளவேண்டும் என்பதற்காக தினமும் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு காலையில் புதுக்கோட்டை பேருந்து நிலையம் வந்து விடுகிறார்..அப்படியே பேருந்தின் பின்புறம் தனது வாகனத்தில் வந்து கொண்டு ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் கீழப்பழுவஞ்சி,மேலப்பழுவஞ்சி,பெருமாநாடு,புல்வயலில் நின்று தனது மாணவர்களை கண்காணித்து கொண்டு பள்ளி வரை வருகிறார்.இது குறித்து தலைமையாசிரியர் ஜெயராஜ் அவர்களிடம் பேசினோம்..

அப்பொழுது அவர் கூறியதாவது:நான் ஆசிரியர் பணியில் சேர்ந்த நாள் முதல் இந்நாள் வரை மாணவர் நலனில் அக்கறை செலுத்துவது என் வழக்கம்..அதுவும் மாணவர்கள் சரியான நேரத்துக்கு பள்ளிக்கு வருகை புரிதல், மாலையில் பள்ளி முடிந்தவுடன் பாதுகாப்பாக வீட்டுக்கு செல்லுதல் என்பதில் தெளிவாக இருப்பேன்..2015 ஆம் ஆண்டில் இருந்து இப்பள்ளியின் தலைமையாசிரியராக நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக பணிபுரிந்து வருகிறேன்.

வயலோகம் பள்ளிக்கு சுற்று வட்டார பகுதி மாணவர்கள் படிக்க வருவதால் கூடுதலாக பேருந்து வசதி அதிகமாக தேவைப்படுகிறது...
ஆனால் புதுக்கோட்டையில் இருந்து வயலோகம் வரை பள்ளிக்கு வந்து படிக்கும் மாணவர்கள் கூட்டம் அதிகம்..ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் மாணவர்கள்,மாணவிகள் தனியாக வரிசையாக நின்று ஏறுகிறார்கள்..காலை மாலை சிறப்பு வகுப்புகள் நடைபெறும்..மாலையில் சிறப்பு வகுப்புகள் முடிந்தவுடன் பெண்கள் மட்டும் 6 மணிக்கு வயலோகம் வரும் 5 ஆம் எண் பேருந்தில் பயணம் செய்ய வேண்டும்..ஆண்கள் 6.10 மணிக்கு வயலோகம் வரும் 12 A பேருந்தில் பயணம் செய்ய வேண்டும்...பெண்களுக்கு போக்குவரத்தில் பாதுகாப்பு மற்றும் முழு ஒழுக்கம்ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இத்தகைய முறையை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம்..காலையில் எப்படி பேருந்தில் பின்புறம் வந்து மாணவர்களை கண்காணிக்கிறேனோ அதே போல மாலையிலும் மாணவர்களை பஸ் ஏற்றிவிட்டு பேருந்தின் பின்புறம் கண்காணிப்பதே எனது வாடிக்கையாகும்.காலையில் 5 ஆம் எண் பேருந்தில் பயணம் செய்யும் ஏறத்தாழ 150 மாணவ ,மாணவியர்கள் மாலையில் 100 மாணவிகள்,மாணவர்கள் 50 பேர் என தனித்தனியாக பிரித்து அனுப்புவதால் மாணவர்கள் படியில் நின்று பயணம் செய்யமாட்டார்கள்.ஆபத்தான பயணம் தவிர்க்கப் பட்டு முழுதும் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளப்படுகிறது..சிறப்பு வகுப்பு உள்ளவர்கள் 10,11,12 வகுப்பு மாணவர்கள் காலையில் 5 ஆம் எண் பேருந்தில் ஏறி8.40 மணிக்கு எல்லாம் பள் ளிக்கு வந்து விடுவார்கள்..அதன்வபின் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பி.டி.ஆர் பேருந்தில் ஏறி பள்ளிக்கு வந்து விடுவார்கள் ...போக்கு வரத்து நெரிசலை குறைக்கவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம்..மாலை நேர வகுப்பானது 4.30 முதல் 5.30 வரை 10,11,12 வகுப்புகளுக்கு நடைபெறும் அந்நேரம் 6 முதல் 9 வரை உள்ள மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது....




இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் டாக்டர் அழகேசன் தன்னுடைய தாய்
தந்தையர் பெயரில் ஏற்கனவே 2 இலட்சம் மதிப்பில் கட்டிய கலையரங்கத்திற்கு
ரூ. 1 இலட்சம் மதிப்பில் சென்ற ஆண்டில் மேற்கூரை அமைத்து
கொடுத்துள்ளார்..இப் பள்ளியின் தேர்ச்சியும் சதவீதம் அதிகரிக்க இப்பள்ளி
ஆசிரியர்கள் இருந்து வருகிறார்கள்....கிராமப் புற பகுதியான எம் பள்ளியில்
பயின்று 12 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் அகிலன் வேல்
தொழில்நுட்ப பொறியியல் கல்லூரியில் இலவசமாக பயில புதுக்கோட்டை
மாவட்டத்திலேயே ஒருவனாக அரசுப் பள்ளியில் இருந்து தேர்வு
செய்யப்பட்டுள்ளான்...இப் பள்ளிக்கு பணிக்கு வந்த புதிதில் 620 மாணவர்களோடு
செயல்பட்டு வந்த இப்பள்ளியை தற்பொழுது 750 மாணவர்கள் பயின்று வரும்
பள்ளியாக மாற்றி மாணவர் சேர்க்கையை அதிகரித்து உள்ளார்கள் இப்பள்ளி
ஆசிரியர்கள்...முன்னாள் தலைமை ஆசிரியரின் மகன் பொதுத் தேர்வில் முதல்
மதிப்பெண் பெறும் மாணவ மாணவியர்களுக்கு ரூ. 15000 பரிசு வருடம் சென்ற
வருடம் முதல் வழங்க இருப்பதாக கூறியுள்ளார்.நான் கிராமப் புற பகுதியில்
இருந்து படித்து வந்ததால் மாணவர்கள் நலன் கருதி காலையில் 8.30 மணிக்கு
பள்ளி வரும் என்னை மாலை 6.30 மணி வரை ஞாயிற்று கிழமை தவிர அனைத்து
நாட்களிலும் பள்ளியில் காணலாம்.தன்னுடைய 22 ஆண்டுகால பணிக்காலத்தில் மத
விடுப்பு இது வரை ஒரு நாள் கூட எடுக்கவில்லை ..இதற்கு அடிப்படை காரணம் தான்
பயின்ற மதுரை மாவட்டம் தே.கல்லுபட்டியில் உள்ள காந்தி நிகேதன் மேல்
நிலை பள்ளியே என்றவர் கிராமப்புற மாணவர்களுக்கு ஒழுக்கம் மற்றும்
சுகாதரத்துடன் கூடிய பாதுகாப்பான கல்வியை கற்றுத்தருவதே இப்பள்ளி
ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களின் நோக்கம் என்றார்..