உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் மனஅழுத்தம்...!


இன்றைய இயந்திரகதியான வாழ்க்கையில் மன அழுத்தம் தவிர்க்க முடியாததாகி விட்டது. அது மனதை மட்டுமல்ல உடல் நலத்தையும் பாதிக்கிறது. சாதாரணமாக நினைக்கும் ஒரு விஷயத்தை மனதில் போட்டு புதைத்து, பின்னர் அடிக்கடி அது பற்றி சிந்திக்கும்போது அது மனநலனை பாதிப்புக்குள்ளாக செய்துவிடுகிறது. இந்த பிரச்சினையால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
சில நாட்களில் சரியாகிவிடும் என்று கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். அது மன இறுக்கமாக மாறி பிரச்சினையை அதிகப்படுத்தி விடுகிறது. தினசரி செயல்பாடுகளில் ஆர்வம் குறைவது, நம்பிக்கையின்றி இருப்பது, சோர்வாக காணப்படுவது போன்றவை மன இறுக்கத்தின் அறிகுறிகளாகும். ஒருசிலர் ஏதாவது ஒரு முக்கிய காரியத்தை செய்ய தொடங்கும்போது பீதியுடனும், மனக்கலக்கத்துடனும் காணப்படுவார்கள்.
அது இயல்பானதுதான். ஆனால் பயம் நீங்காமல் தொடர்ந்து நீடிப்பது, பதற்றம், களைப்புடன் இருப்பது, எப்போதும் எதையாவது சிந்தித்தபடி இருப்பது, கவலைப்படுவது போன்றவை மன நலனுக்கு பங்கம் விளைவித்துவிடும்.

மன அழுத்தம் அதிகரிக்கும்போது அட்ரினலின், கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் அளவு அதிகமாகிறது..தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை செய்ய வேண்டும். அதன் மூலம் நல்ல உணர்வை தரும் ஹார்மோன்கள் சுரக்கும். அது மன அழுத்தத்தை குறைக்க உதவும்.