அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கெடுபிடி: 9 மணிக்குள் பள்ளியில் இருக்க உத்தரவுஆசிரியர்கள் தாமதமாக வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நடப்பு கல்வியாண்டில், கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன
அனைத்து வகை பள்ளிகள், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன
ஆசிரியர்களின் செயல்பாடு குறித்து பல்வேறு கெடுபிடிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன
சேலம், முதன்மை கல்வி அலுவலர் ஞான கவுரி வெளியிட்டுள்ள சுற்ற றிக்கையில், 'ஜூலை, 2 முதல், ஆசிரியர்கள், காலை, 9:00 மணிக்குள், பள்ளியில் இருக்க வேண்டும்
ஆசிரியர்கள் வருகைப்பதிவை முடித்த பின்பே, தலைமையாசிரியர்கள், இறைவணக்கத்தை தொடங்க வேண்டும். தாமதம் ஏற்பட்டால், விளக்கமளிக்க வேண்டும்
பர்மிஷன்(அனுமதி) கிடையாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது