பட்டதாரிகளுக்கு மாவட்ட நீதித்துறையில் வேலை சம்பளம் : ரூ.20,600 - 65,500

கரூர் மாவட்ட நீதித் துறையில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கம்ப்யூட்டர் ஆபரேட்டர் 
காலியிடங்கள்: 7 
சம்பளம்: ரூ.20,600 - 65,500
தகுதி: கணினி அறிவியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சில் இளநிலை முடித்திருக்க வேண்டும். 
வயது வரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தை, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம், தான்தோன்றிமலை, கரூர் - 639 007. விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி: 09.07.2018. 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/tn/karur என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.