+ 2 படித்தவர்களுக்கு இந்திய விமானப் படையில் பணி.!!! விண்ணப்பிக்கக் கடைசித் தேதி : 24/7/18இந்திய விமானப் படையில் குரூப் எக்ஸ் மற்றும் குரூப் ஒய் பிரிவில் காலியாக இருக்கும் பயிற்சியுடன் கூடிய ஏர்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: ஏர்மேன்

வயது வரம்பு: 1998 ஜூலை 14 முதல் 2002 ஜூன் 26க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ப்ளஸ் 2 படிப்பை இயற்பியல், கணிதம், ஆங்கிலம் ஆகியவற்றுடன் படித்து குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மூன்று வருட இன்ஜினீயரிங் டிப்ளோமா படிப்பையும் படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு வாயிலாகத் தேர்ச்சி இருக்கும். திறனறியும் தேர்வு, மருத்துவப் பரிசோதனை போன்ற மற்ற தேர்ச்சி முறைகளும் நடைபெறும்.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி : 24/7/18

மேலும் விவரங்களுக்கு www.davp.nic.in/WriteReadData/ADS/eng10801151819b.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.