Title of the document



இந்தியாவின் எந்த பகுதியில் வசிக்கும் நபரும், மொபைல் போன் மூலம் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும் வகையில், புதிய, ‘மொபைல் ஆப்’பை, பாஜவைச் சேர்ந்தவரும், வெளியுறவு அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் சமீபத்தில் அறிமுகம் செய்தார்.


  இதில், கம்ப்யூட்டர், பிரிண்டர் இன்றி, மொபைல் போன் மூலம், பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பதுடன், அதற்கான கட்டணம் செலுத்தி, நேர்காணலுக்கான நேரம், தேதியை பெறும் வசதியும் உள்ளது.

இதனால், புதிய, ‘மொபைல் ஆப்’பிற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த வகையிலான பாஸ்போர்ட்டிற்கான புதிய மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு நாட்களில், 10 லட்சம் பேர் அந்த ‘ஆப்’பை பதிவிறக்கம் செய்துள்ளதாக, அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
أحدث أقدم