Title of the document
























    

 


  Income Tax -2018 calculator-(A4-2page with form16) இந்தியாவிலே முதன்முறையாக தமிழகத்தில் வணிகவியல் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு CA பயிற்சி அரசுப் பள்ளிகளில் வணிகவியல் பயிலும் மாணவர்களுக்கு சிஏ தொடர்பான பயிற்சி அளிப்பதற்கு இந்திய பட்டயக் கணக்காளர் கழகத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தலைமைச் செயலகத்தில், இந்திய பட்டயக் கணக்காளர் கழக நிர்வாகிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். பள்ளிக்கல்வித்துறையும் இந்திய பட்டயக் கணக்காளர் கழகமும் இணைந்து மேல்நிலைப் பிரிவில் வணிகவியல் பயிலும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். இதன் மூலம் 3 ஆயிரத்து 100 வணிகவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.இதேபோல, 1000 அரசுப் பள்ளிகளை தேர்வு செய்து, அங்கு வணிகவியல் மாணவர்களுக்கு 500 பட்டயக் கணக்காளர்கள் மூலம் சிஏ தொடர்பான வழிகாட்டுதல்கள், பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதுவரை இந்த திட்டம் இந்தியாவில் எங்கும் செயல்படுத்தவில்லை என்றும், இந்தியாவிலே முதன்முறையாக தமிழகத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார் Make Google view image button visible again: https://goo.gl/DYGbub Make Google view image button visible again: https://goo.gl/DYGbub Make Google view image button visible again: https://goo.gl/DYGbub Make Google view image button visible again: https://goo.gl/DYGbub

Make Google view image button visible again: https://goo.gl/DYGbub
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post