சிறுபான்மை மொழிக்காக தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்: அமைச்சர் செங்கோட்டையன்


சிறுபான்மை மொழிகள் காக்கப்படும்; சிறுபான்மை மொழிக்காக தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழ் கட்டாயம் என்ற கொள்கை முடிவு இருந்தாலும் சிறுபான்மை மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.