பொறியியல் படிப்பில் சேருவதற்கான 'ரேண்டம் எண்' வெளியீடு

பொறியியல் படிப்பில் சேருவதற்கான ரேண்டம் எண்ணை உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வெளியிட்டார். இந்த ஆண்டு பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் ஜூன் 2-ம் தேதி வரை விண்ணப்பிக்கப்பட்டது. ஜூன் 8-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஆண்லைன் கலந்தாய்வு நடைபெறும் என்று பல்கலைகழகம் அறிவித்துள்ளது. மொத்தம் 42 மையங்களில் பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறும் என்றும் அப்போதே அதன் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடைபெறும் என்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதில் 1,59,631 இடங்களுக்கு மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும் சமவாய்ப்பு எண் என்ற இந்த பத்து இலக்க எண்ணினை இன்று உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அண்ணாபல்கலை கழகத்தின் துணை வேந்தர் சூரப்பா ஆகியோர் வெளியிட்டனர்.  இந்த ரேண்டம் எண்ணை கொண்டு ஒரே மதிப்பெண்களை பெற்ற 2க்கும் மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்படும்.மேலும் ஒரே மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு இடங்களை தேர்வு செய்வதற்கு கணிதம், இயற்பியல் மற்றும் நான்காவது விருப்ப பாட மதிப்பெண்கள் மற்றும் பிறந்த தேதிக்கு பிறகு 5வது காரணியாக இந்த சமவாய்ப்பு எண் பயன்படுத்தப்படுகிறது. ரேண்டம் எண் என்பது கணினி மூலமாக மாணவர்களுக்கு வழங்கப்படும் 10 இலக்க எண் ஆகும்.ரேண்டம் எண்ணை வெளியிட்ட பின் அமைச்சர் கே.பி. அன்பழகன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணபித்த மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இதில் 1,00214 இடங்களுக்கு மாணவர்களும், 59,416 இடங்களுக்கு மாணவிகளும் விண்ணபித்துள்ளனர் என கூறினார். மேலும் ராணுவம் மற்றும் விளையாட்டு கோட்டாவில் 2171 மாணவர்கள் விண்ணபித்துள்ளனர் என்றும் இதில் 270 பேர் தான் டிடி முலம் சேர்ந்துள்ளனர் என்றும் தெரிவித்தார். இதில் மொத்தம் உள்ள 1,59,631 இடங்களுக்கு 509 கல்லூரிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று கூறினார்

0 Comments:

Post a Comment