Title of the document
  சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது
திருச்சுழி தங்கம் தென்னரசு (திமுக) பேசியதாவது:

அரசு பள்ளிகளில் இன்றைய சூழ்நிலையில் மாணவர்கள் அதிகமாக சேரவில்லை என்ற ஒரு கருத்து இருக்கிறது
எனவே, மாணவர்கள் அதிகமாக சேருவதற்கு அரசு என்ன முயற்சியை மேற்கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில் தக்க வைத்தல் விகிதம் என்று சொல்லக்கூடிய அளவிலே, தொடக்கப்பள்ளிகளில் இருக்கக்கூடிய தக்க வைத்தல் விகிதம், நடுநிலைப்பள்ளிகளில் வருகிற போது குறைந்து கொண்டே போகிறது.
அரசு பள்ளிகளை நோக்கி மாணவர்கள் அதிகமாக ஈர்ப்பதற்கு அரசு என்ன விதமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன் வந்துள்ளது?.
அமைச்சர் செங்கோட்டையன் பதில்:
கல்வி குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, துண்டு பிரசுரத்தின் வாயிலாக மாணவர்களை சேர்க்கின்ற நிலைைய உருவாக்குவதற்கும், ஸ்மார்ட் வகுப்புகள் மூலமாக 6ம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களுக்கு, ஏறத்தாழ 5600 பள்ளிகளிலே ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்க உள்ளோம்.
தனியார் பள்ளிக்கு செல்வதற்கு காரணமே, பெற்றோரின் எண்ணங்கள் என்னவாக இருக்கின்றது என்று சொன்னால், ஆங்கிலத்தை தங்களுடைய குழந்தைகள் கற்று ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று ஆர்வம் இருக்கிறது.
அங்கன்வாடியில் படித்து விட்டு4 ஆண்டுகள் முடித்த பிறகு, அந்த மாணவர்கள் தனியார் பள்ளிக்கு செல்வதை நிறுத்தி, அந்த மாணவர்களுக்கு ஓரளவிற்கு ஆங்கிலத்தை கற்று தருவதற்கான நடவடிக்கை ேமற்கொள்வதற்கு அரசு ஆய்வு பணிகளை மேற்கொண்டிருக்கிறது. அப்படி வருகின்ற போது  தனியாருக்கு செல்கின்ற மாணவர்கள், அரசு பள்ளிகளில் சேருகின்ற நிலை உருவாக்கப்படும்.
தங்கம் தென்னரசு:
மொழிப்பாடம் என்பது ஒரு சுமையாக இல்லாமல் அது ஒரு சுகமாக இருக்கக்கூடிய வகையில், அதை மாற்றுவதற்கு அரசு ஏதேனும்  சிறப்பு நடவடிக்கை எடுக்க முன்வந்திருக்கிறதா?
அமைச்சர் செங்கோட்டையன் பதில்:
ஆசிரியர்களுக்கும் கூடுதல் பணிச்சுமை இல்லாமல், மாணவர்களுக்கு மன அழுத்தம் இல்லாத இந்த நிலையை அரசு ஏற்படுத்தியிருக்கிறது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post