அனைத்து பள்ளிகளில் ஆய்வகங்கள், கழிவறைகள் கட்டப்படும்: செங்கோட்டையன் *அனைத்து பள்ளிகளிலும், கழிவறைகள், ஆய்வகங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதிபட கூறியிருக்கிறார்.*

*சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின்போது, பள்ளி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என்ற செங்கம் உறுப்பினர் கிரியின் கோரிக்கைக்கு பதிலளித்துப் பேசிய செங்கோட்டையன் இவ்வாறு கூறியிருக்கிறார்.*

 *மேலும், கழிப்பறை இல்லாத பள்ளிகள் குறித்த விவரங்களை தெரிவிக்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாகவும், செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.