சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் எம்.பில், பிஎச்டி படிப்புகளுக்கான விண்ணப்பத் தேதி நீட்டிப்பு


இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறுதுணை வேந்தர் குழந்தைவேல்தெரிவித்துள்ளார்சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 23 ஆராய்ச்சி துறைகள் உள்ளன.

மேலும்,பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற கல்லூரிகளில் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆராய்ச்சிதுறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆய்வுதுறைகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது.மேலும், ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்குவதுடன், ஏராளமான அறிவுயல்ஆய்வாளர்களையும் உருவாக்கியுள்ளது.பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி கல்வி முடித்தவர்கள்தற்போது பல்வேறு இடங்களில் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பெரியார் பல்கலைக்கழக ஆய்வு துறைகள் மற்றும் இணைவுப் பெற்றக் கல்லூரிகளில் எம்.பில் மற்றும்பி.எச்.டி ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.இந்த விண்ணப்பங்கள் பெறுதல் மற்றும் சமர்பிக்கும் கடைசி தேதி ஜீன் 25-ம் நாள் வரை நீட்டிக்கப்பட்டுஉத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை வழங்கிய பல்கலைக்கழகத் துணை வேந்தர்குழந்தைவேல், ஆராய்ச்சி படிப்புக்கு இதுவரை விண்ணப்பிக்காத ஆய்வாளர்கள் விண்ணப்பிக்க இந்த கடைசி தேதி நீட்டிப்பு உதவும் எனவும் இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறும்தெரிவித்துள்ளார்