இந்த போன்களில் இனி வாட்ஸ் அப் இயங்காது...


ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் பிரதான மெசேஜ் அப்ளிகேசனாக திகழ்வது வாட்ஸ் அப். இந்த அப்ளிகேசனில் அவ்வபோது அப்டேட்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதற்கேற்றாற் போல், ஸ்மார்ட்போன்களின் ஓ.எஸ்.ஸும் ஆதரிக்க வேண்டும் என்பதால், வாட்ஸ் அப் நிறுவனம் அதிரடி முடிவில் இறங்கியுள்ளது.பழைய போன்களுக்கான வாட்ஸ் அப் ஆதரவை நிறுத்த முடிவு செய்துள்ளது அந்நிறுவனம்.

அதன்படி, ஆண்டிராய்டு 2.3.3 பதிப்புக்கு முந்தைய பதிப்புகளுக்கான ஆதரவை வாட்ஸ் அப் நிறுத்தி விட்டது. இனி ஆண்டிராய்டு 2.3.3 பதிப்புக்கு கீழ் உள்ள ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் அப் செயல்படாது.அதேபோல், கீழ்காணும் ஸ்மார்ட்போன்களிலும் வாட்ஸ் அப் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் 8.0 பதிப்புக்கு குறைவான ஸ்மார்ட்போன்கள்,
ஐபோன் 3ஜிஎஸ்/ ஐஓஎஸ் 6 பதிப்புக்கு குறைவான ஸ்மார்ட்போன்கள்,
நோக்கியா சிம்பியன் எஸ்60,
பிளாக்பெர்ரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10
நோக்கியா எஸ்40 செல்பேசிக்கு 2018, டிசம்பர் 31 வரை மட்டுமே வாட்ஸ் அப் செயல்படும்
ஐஓஎஸ் 7 செல்பேசிக்கும், ஆண்டிராய்டு 2.3.7 பதிப்பு செல்பேசிக்கும் 2020 , பிப்ரவரி 1 வரை மட்டுமே வாட்ஸ் அப் செயல்படும்
மற்ற போன்களில் உள்ள வாட்ஸ் அப் அப்ளிகேசனை அப்டேட் செய்து கொள்ளுமாறு அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது

0 Comments:

Post a Comment