Title of the document


கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி. பாலச்சந்திரன் தெரிவித்தார்.
நாமக்கல்லை அடுத்த லத்துவாடியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தேசிய பருவமழை மாற்றத்துக்கான வேளாண்மை முனைப்பு திட்டத்துக்கான ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் சி. பாலச்சந்திரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இருந்து வேளாண்மை அறிவியல் நிலைய வல்லுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆய்வுக் கூட்டத்துக்குப் பின் துணைவேந்தர் சி. பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
2018-19 ஆம் ஆண்டுக்கான கால்நடை மருத்துவம் இளங்கலை படிப்புக்கான விண்ணப்பப் படிவங்களை அனுப்ப ஜூன் 18-ஆம் தேதி இறுதி நாளாகும்.
இளங்கலை படிப்பில் 360 இடங்களுக்கு 12,107 விண்ணப்பங்களும், தொழில்நுட்பப் படிப்பில் 100 இடங்களுக்கு 2,418 விண்ணப்பங்களுமாக மொத்தம் 14,525 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
ஜூலை முதல் வாரத்தில் கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஜூலை 3-ஆவது வாரம் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. நிகழாண்டில் எந்தவிதமான புதிய படிப்புகளும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றார் அவர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post