கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.72 லட்சம் மோசடி : 3 பேர் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலை : கூட்டுறவு கடன் சங்கத்தில் மோசடியில் ஈடுபட்ட நகை மதிப்பீட்டாளர்
உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ரூ.72 லட்சம் மோசடி செய்ததாக சங்க செயலாளர் முருகன், காசாளர் சுதாகரன் பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவு கடன் சங்க தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.