கல்வித்துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றுபவர்கள் விவரம் சேகரிப்பு

கல்வித்துறையில் மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அலுவலர்கள் விவரங்களை கல்வித்துறை சேகரித்து  வருகிறது.

பள்ளி கல்வித்துறையில் மாணவர்கள் நலன் பேணும் வகையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்  தொடர்ச்சியாக மேம்பட்ட மற்றும் வெளிப்படையான நிர்வாக நடைமுறைகளை கொண்டு வரும் வகையில் கல்வித்துறையில் மூன்றாண்டுகளுக்கு  மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் அலுவலர்கள் தொடர்பான விபரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று (4ம் தேதி) உள்ள நிலவரப்படி முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள், வட்டார அலுவலகங்கள், தணிக்கை  அலுவலகங்கள், மாவட்ட கல்வி ஆராய்ச்சி பயிற்சி மற்றும் நிறுவனங்கள் போன்றவற்றில் மூன்றாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து ஒரே  அலுவலகத்தில் பணிபுரியும் நேர்முக உதவியாளர், பள்ளி துணை ஆய்வாளர், கண்காணிப்பாளர், இருக்கை பணி கண்காணிப்பாளர், உதவியாளர்,  இளநிலை உதவியாளர் ஆகியோர் விபரங்களை அலுவலகம் வாரியாக சேகரித்து அனுப்பி வைக்கவேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிகள் நீங்கலாக கல்வித்துறைக்குட்பட்ட அனைத்து அலுவலகங்களிலும் இந்த விபரங்களை விடுபடாமல் சேகரித்து  அனுப்பி வைக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வி இணை இயக்குநர் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளார்.

0 Comments:

Post a Comment