அரசு பள்ளிகளில் நடைபெற்ற சிறப்பு நீட் பயிற்சி வகுப்புகளில் படித்தவர்களில் 1337 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி

அரசு பள்ளிகளில் நடைபெற்ற சிறப்பு நீட் பயிற்சி வகுப்புகளில் படித்தவர்களில் 15 சதவீதத்தினர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசு பள்ளிகளில் நடைபெற்ற சிறப்பு நீட் பயிற்சி வகுப்புகளில் 8,445 பேர் பங்கேற்றனர். 412 மையங்களில் இந்தப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்நிலையில், நீட் தேர்வில்  1,337 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதிகபட்சமாக நெல்லையைச் சேர்ந்த 195 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். இதில் 74 அரசு பள்ளி மாணவர்களும், 121 அரசு உதவிப்பெறும் பள்ளியை சேர்ந்த மாணவர்களும் தேர்ச்சியடைந்துள்ளனர்.

அடுத்தப்படியாக,  கன்னியாகுமரியில் அரசுப்பள்ளியை சேர்ந்த 68 மாணவர்கள், அரசு உதவிபெறும் பள்ளியைச் சேர்ந்த 105  மாணவர்கள் என 173 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாகப்பட்டினத்தில் 85 மாணவர்களும், ராமநாதபுரத்தில் 77 மாணவர்களும் நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ளனர்.

பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தை பிடித்த விருதுநகர் மாவட்டம், நீட் தேர்வில் 70 மாணவர்கள் தேர்ச்சியுடன் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகித பட்டியலில் 5-வது இடத்தை பிடித்துள்ளது. குறைந்தபட்சமாக நீலகிரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 3 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்

0 Comments:

Post a Comment