11-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு T.C வழங்க கூடாது: தமிழக அரசு உத்தரவு

11-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பள்ளியில் வற்புறுத்தி மாற்றுச்சான்று கொடுக்க கூடாது என்று தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் கூறியுள்ளது.11-ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தாலோ, தேர்வில் தோல்வியுற்றாலோ மாணவர்களிடமும் அவர்களின் பெற்றோரிடமும் மாற்றுச்சான்றிதழ் பெற்றுக்கொள்ளுமாறு பல மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாகம் நிர்பந்தித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், 10-ம் வகுப்பில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களையும் மாற்றுச்சான்றிதழ் பெற்றுக்கொள்ளுமாறு பள்ளிகள் மாணவர்களையும், பெற்றோரையும் வற்புறுத்துவதாக தெரிவிக்கிறது.

இது குறித்து பல புகார்கள் வருவதாக தெரிவித்த தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கும் இதனை தொடரக்கூடாது என சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.அதில், 11-ம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைவாக இருந்தாலும், தோல்வியுற்றாலும் அவர்களை மாற்றுச்சான்றிதழ் பெற்றுக்கொள்ள நிர்பந்திக்க கூடாது. மேலும் 10-ம் வகுப்பு வரை அதே பள்ளியில் படித்த மாணவர்களை மதிப்பெண் குறைவாக உள்ளது என்ற காரணத்தினால் அவர்களை 11-ம் வகுப்பு சேர்க்கையின் போது பள்ளியில் சேர்க்க அனுமதிக்காமல் இருப்பதை தவிர்க்க வேண்டும்.தொடர்ந்து அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 11-ம் வகுப்பு சேர்க்கையின் போது முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

0 Comments:

Post a Comment