பத்தாம் வகுப்பு மறுகூட்டல்: 3 மாவட்ட மாணவர்களுக்கு அவகாசம் நீட்டிப்பு

Join Our KalviNews Telegram Group - Click Here


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மேலும் எந்தத் தேதி வரை அவகாசம் என்பது குறித்து பின்னர் பின்னர் அறிவிக்கப்படும் என அரசு தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. 
இது குறித்து தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:- தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து விடைத்தாள்களின் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மே 24 முதல் மே 26-ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 
இந்த நிலையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இணையதள வசதி நிறுத்தம், 144 தடை உத்தரவு ஆகியவை அமலில் உள்ளதால் அந்த மாவட்டங்களிலிருந்து பத்தாம் வகுப்பு மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், தனித்தேர்வர்கள் ஆகியோர் மூன்று மாவட்டங்களுக்கும் அமைதி நிலைக்குத் திரும்பிய அடுத்த நாளிலிருந்து மூன்று நாள்களுக்குள் விண்ணப்பிக்க வாய்ப்புத் தரப்படும். அதற்கான தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும். எனவே மாணவர்கள், பெற்றோர் இது குறித்து பதற்றம் கொள்ள வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்