சென்னை கல்வி இயக்குனர் அலுவலகத்தை மே 21ல் முற்றுகை : மாற்றுத்திறன் மாணவர் பயிற்றுனர்கள் அறிவிப்பு
அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் சங்கங்களின் நடவடிக்கை கூட்டுக்குழுவின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்றது
கூட்டத்தில் நிர்வாகிகள் பேசியதாவது, ‘‘தமிழகம் முழுவதும் சுமார் 2,500 சிறப்பு பயிற்றுனர்கள் உள்ளனர். 18 ஆண்டுகளாகியும் பணியானது தினக்கூலி அடிப்படையில் உள்ளது. இதனால் வாழ்க்கைத்தரம் மேம்படாமல் இருந்து வருகிறோம்
தற்காலிக தொகுப்பூதிய பணி ஆணை, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
கோரிக்கைகளை வலியுறுத்தி மே 21ம் தேதி சென்னையில் உள்ள மாநில திட்ட அனைவருக்கும் கல்வி இயக்க இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளோம் என்றனர். மேலும், டெல்லி மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரை சந்தித்து மனு அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment