தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கோடை விடுமுறையிலும் வகுப்புகள் நடத்தப்படுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோடை விடுமுறை காலங்களில் எந்த பள்ளிகளிலும் வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
அந்த உத்தரவை மீறி குமரி மாவட்டத்திலுள்ள பல தனியார் பள்ளிகளில் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு பாடம் நடத்தப்பட்டு வருவதாக மாணவர்கள், பெற்றோர்கள் தெரிவித்தனர். இது குறித்து பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போது இம்மாத இறுதிவரை மட்டுமே பள்ளி நடத்தப்படும் என தெரிவித்தனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
إرسال تعليق