Title of the document

மாணவர்கள் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூடவும், குறைவான சேர்க்கை உள்ள பள்ளிகளை ஒன்றாக இணைக்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசின் சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் தொடக்கப்பள்ளிகளை பகுத்து, ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை மாநிலங்களுக்காக மத்திய மனித வளத்துறை அமைச்சகம் வகுத்துள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன் பிரதமர் மோடி, பள்ளிக் கல்வி துறைக்கு கட்டளைகள் பிறப்பித்து இருந்தார்.

அதன்படி, சில பள்ளிகளை உருவாக்கி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டநிலையில், அதில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். தேவைக்கு அதிகமான இருக்கும் பள்ளிகள், தேவைப்படும் இடங்களில் பள்ளிகள் என பகுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.

தற்போது மாநிலங்களில் அதிகமான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன, அருகருகே பள்ளிள் இருக்கின்றன, இதனால், சில பள்ளிகளில் மாணவர்கள் இல்லாமலே செயல்பட்டு வருகிறது, சில பள்ளிகளில் குறைவான மாணவர்களே படித்து வருகிறார்கள். இதனால் பள்ளிகளை கண்காணிப்பதிலும், மேற்பார்வையிடுவதிலும் சிக்கல்கள் நீடிக்கின்றன.

இதைப் போக்கும் வகையிலும், மனித வளத்தை சிறப்பாக பயன்படுத்தும் வகையிலும், *மாணவர்கள் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூடிவிட்டு, குறைவான மாணவர்கள் சேர்க்கை உள்ள பள்ளிகளை இணைக்க மத்திய மனித வளத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.*

சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் 2.04 லட்சம் தொடக்கப்பள்ளிகளும், 1.59 லட்சம் உயர் தொடக்கப்பள்ளிகளும் 2015-16ம் ஆண்டுவரை தொடங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post