தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வு முடிவு கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. அதன் பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்டு மாதம் நடைபெற்றது.
அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு வருகிற 19–ந் தேதி முதல் 23–ந்தேதி வரை சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கிறது. கலந்தாய்வுக்கு வர தகுதி உள்ளவர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில்( www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment