Title of the document


'டெட்' தேர்ச்சி பெறாத  ஆசிரியர்களுக்கு, இம்மாதத்துக்கான ஊதிய பட்டியலை, தனியாக தயாரித்து அளிக்கும்படி, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்ட கல்வி அலுவலகம் சார்பில், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
ஆசிரியர்களுக்கான வருமான வரியை, இம்மாத ஊதியத்தில், கட்டாயம் பிடித்தம் செய்ய வேண்டும். வருமான வரிக்கு உட்படாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள், தோராய மதிப்பீட்டு படிவத்தில், விபரங்களை குறிப்பிட்டு முன்னிலைப்படுத்த வேண்டும்.ஆசிரியர் தகுதி தேர்வு (டெட்) எழுதாமல், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, வரும், 15ம் தேதியுடன், கால அவகாசம் முடிகிறது.

காலநீட்டிப்பு வழங்குவது தொடர்பாக, அரசாணை வெளியிடவில்லை. எனவே, 'டெட்' தேர்வு எழுதாத ஆசிரியர்களுக்கு, தனி ஊதிய பட்டியல் தயாரிக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், 'வருமான வரி பிடித்தம் தொடர்பாக, வழக்கமாக வெளியிடப்படும் உத்தரவு தான் இது. 'டெட்' தேர்வு எழுதாதவர்களுக்கு கால அவகாசம் முடிவதால், வருகைப்பதிவேடு விபரங்கள் அளிக்க உத்தரவிடப் பட்டுள்ளது' என்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post