மத்திய அரசின் ரூபாய் நோட்டு செல்லாது தொடர்பான முடிவுக்கு நாட்டின் 82 சதவீத மக்கள் ஆதரவு அளிப்பதாக ஒரு சர்வே கூறுகிறது.
இன்ஷாட் என்ற செய்தி அப்ளிகேஷன் மற்றும் ஐபிஎஸ்ஓஎஸ் ஆகிய அமைப்பு இணைந்து, மோடி அறிவிப்பு வெளியான மறுநாளே நடத்திய சர்வேயில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
மொத்தம் 5 லட்சம் பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐபிஎஸ்ஓஎஸ் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமித் அடார்கர் கூறுகையில், "பெரும்பான்மை மக்கள், மத்திய அரசின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த அரசு மீது நம்பிக்கை அதிகமாக உள்ளது" என்றார்.
இந்த சர்வேயில் பங்கேற்றவர்களில் 80 சதவீதம் பேர் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களாகும். டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை, கொல்கத்தா, புனே, ஹைதராபாத் உள்ளிட்ட 10 பெரு நகரங்களில் சர்வே மேற்கொள்ளப்பட்டிருந்தது.
Post a Comment