Title of the document


சென்னை: மேல்நிலை துணைத்தேர்வெழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகளை, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்.,நடைபெற்ற, செப்டம்பர் 2016 மேல்நிலை துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் (தட்கல் தனித்தேர்வர்கள் உட்பட) தங்களது தேர்வு முடிவினை, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே 03.11.2016ம் தேதி காலை 10.00 மணி முதல் தாங்களே இணையதளத்திலிருந்து தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விதிமுறைகள்தனித்தேர்வர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேற்படி இணையதள முகவரிக்குள் Login செய்தவுடன் "Provisional Mark Sheet HSE Result - Septemer 2016" என்ற Screen தோன்றும். தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்ததேதி ஆகிய விவரங்களை தட்டச்சு செய்ய வேண்டும். மேலும் Screenல் தோன்றும் குறியீட்டினை (Code) அதில் உள்ளது போலவே Type செய்ய வேண்டும்.அதன் பின்பு View Result என்ற Optionஐ Click செய்ய வேண்டும். அப்போது தேர்வர்களது பதிவெண் பெயரில் ஒரு pdf file பதிவிறக்கம் ஆகும். மேற்படி கோப்பில் தேர்வருக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இருக்கும்.

அதனை தேர்வர்கள் print எடுத்துக் கொள்ளலாம்.மேற்கண்ட முறையில் தேர்வர்கள் தமது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது. தேர்வர்களுக்குண்டான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.விடைத்தாள் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை:செப்டம்பர் 2016 தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு 04.11.2016 பிற்பகல் 3.00 மணி முதல் 07.11.2016 வரை (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) நேரில் சென்று உரிய கட்டணத்தினை பணமாகச் செலுத்தி பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.விடைத்தாள் நகல் (copy of the Answer Sheet) பெறுவதற்கான கட்டணம்:பகுதி - I மொழி - ரூ.550/- (இரு தாட்களுக்கு)பகுதி - II மொழி (ஆங்கிலம்) - ரூ.550/- (இரு தாட்களுக்கு)ஏனைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.275/-மறுகூட்டல் (Re-totalling) கட்டணம்:பகுதி - I மொழி, பகுதி - II மொழி (ஆங்கிலம்) மற்றும் உயிரியல் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.305/- (இரு தாள் பாடங்கள்)ஏணைய பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.205/-
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
أحدث أقدم