Title of the document



மாணவர்களின் அகராதியில் வினாக்கள் என்றால், விருப்பமில்லா ஒன்றாகவே அமைந்துவிட்ட தற்போதைய சூழலில் வினாக்களையே விளையாட்டாக கற்க உதவுகிறது இந்த Mouse Mischief மென்பொருள்.
Microsoft நிறுவனத்தால் மாணவர்களுக்காக வழங்கப்படும் இலவச மென்பொருளான இது MS PowerPoint உடன் இணைந்து செயல்படும் விதமாக வடிவமைக்ப்பட்டுள்ளது. இதன் மூலம் சரியா தவறா என பதில் அளித்தல் , சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல், படம் வரைதல் போன்ற வினா வகைகளை உருவாக்கலாம்.
இருபதுக்கும் மேற்பட்ட சுட்டிகளையும் (Mouse), சுட்டியான மாணவர்களையும் ஒரே நேரத்தில் இணைக்க முடியும். வினாக்களுக்கான விடைகளை, தனி நபராகவோ அல்லது குழுவாக இணைந்தோ அளிக்கும்படி இருவேறு வழிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
மாணவர்கள் அளிக்கும் விடைகள் சரியானதா இல்லையா என்பதையும், எந்த குழு முதலில் பதில் அளித்தது என்பதும், உடனுக்குடன் கணினித் திரையில் வண்ணமயமாகக் காட்டப்படுகிறது. விளையாட்டின் இறுதியில் ஒட்டுமொத்த முடிவும் தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்களை, வினாக்களுக்கு பதில் அளிக்கிறோம் என்ற உணர்வில் இருந்து விலக்கி, விளையாட்டு என்ற எண்ணத்துடனே கற்க உதவும் அருமையான மென்பொருள் இந்த Mouse Mischief.

மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
http://www.microsoft.com/en-in/download/confirmation.aspx?id=7037
பயன்படுத்தும் முறை பற்றிக் காண இங்கே சொடுக்கவும்
https://www.youtube.com/watch?v=NMPsWfiWzF8

நன்றி : மெல்வின் ஆசிரியர்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post