Title of the document
செவிலிய பட்டயப்படிப்பு: 1,484 காலியிடங்கள்

சென்னை: தமிழகத்தில் செவிலிய பட்டயப்படிப்புக்கான கலந்தாய்வின் முதல்நாள் முடிவில் 1,484 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
தமிழகத்தில் 23 அரசு செவிலிய பட்டயப்படிப்பு பள்ளிகளில் மொத்தம் 2 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்தப் படிப்புக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இதில் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்த 733 பேரில் 570 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர். கலந்தாய்வின் முடிவில் 516 இடங்கள் நிரப்பப்பட்டன. மீதம் 1,484 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. காலியாக உள்ள இடங்களுக்குத் தொடர்ந்து அக்டோபர் 19, 20 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.


கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள், தங்கள் தர வரிசையின் அடிப்படையில் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
أحدث أقدم